கன்னி நாய் பெயர் காரணம்


கன்னி பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது அவளுக்கு சிறுவாடாக (அதாவது வரும்கால சிறு சேமிப்பாக) அவர்கள் செல்லமாக வளர்த்த ஒரு ஆட்டையும், நாயையும் (மேச்சலுக்கு, காவலுக்கு உதவி புரிய) சீதனமாக கொடுப்பது மரபு.
இந்த இன ஆடு மற்றும் நாயில் பல நிறங்கள் இருந்தாலும் கொடுக்கப்படும் பிரத்தேக நிறம் - கருப்பு நிறம் (கண் புருவம் மற்றும் கால்களில் பழுப்பு நிறம்).
இவ்வாறு "கன்னிக்கு" (கன்னி பெண்ணுக்கு) நாயை சீதானமாய் கொடுத்ததால் கன்னி நாய் என பெயர் பெற்றது.
தகவல்- மதிப்பிற்குரிய ஐயா திரு.முனியாண்டி கோனார், வயது சுமார் 83. இவருக்கு தெரிந்து இவருடைய தாத்தா காலத்தில் இருந்தே இந்த மரபு நடைமுறையில் காணப்படுகிறது.

Comments