கன்னி நாயின் விலை அன்றும் இன்றும்


கன்னி நாயை பொறுத்தமட்டில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பே இந்த நாய்களை வாங்குவது சாதாரண விஷயம் கிடையாது.

நான் முன்பொரு பதிவில் கூறியது போல ஒரு நாட்டு துப்பாக்கி, பெரிய மனிதர்களின் சீபாரிசு, நீண்ட நாள் காத்திருப்பு என பல சிரமத்துக்கு பின்பே வாங்க முடிந்தது.

மேலும் இவ்வகை நாய்கள் ஜமீந்தார்களிடம் தான் காணப்பட்டது. அவர்களிடம் இருந்து ஒரு நாயை வாங்குவது அவ்வளவு எளிது கிடையாது.

வேட்டைக்காரர்களை பொறுத்தமட்டில் அவர்களுடைய நாயை அவர்களுக்கு நம்பிக்கையாய் இருக்கும் நபர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து வளர்ப்பார்கள்.

இன்றும் சில வேட்டைக்கார்களுடைய இனவழி நாய்களை அவர்களுடைய வாரிசுகளை தவிர எவர்க்கும் கொடுத்தது கிடையாது.

மேலும் கூறவேண்டுமென்றால் இந்த நாய்க்காக வாழ்ந்து திருமண வாழ்க்கையை இழந்த நண்பர்கள் எங்கள் நட்பு வட்டாரத்தில் நிறையபேர் இருக்கிறார்கள்.

அனால் இன்று நிலைமை வேறு. வியாபார நோக்கிற்கு வந்தபிறகு பண்ணையில் வளர்க்கும் நாய்களை அனைவரும் எளிதாக பெற்று வளர்கின்றனர்.

வேட்டைக்காரர்களும் மிக பெரிய தொகை கொடுத்துதான் நாய்களை வாங்கி வளர்த்து வருகிறார்கள். ஆதலால் காட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நாய்களின் குட்டியை வாங்கவேண்டுமென்றால் சராசரியாக 5,000/- குறைவாக நீங்கள் பெற முடியாது. தயவுசெய்து அவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.

சிலபேர் குட்டிக்கு அதிக விலை கேக்கிறார்கள் என எங்கள் முகநூல் குழுவான "கன்னி நாய் (Kanni Dog) பிரியர்கள் சங்கம் - தமிழ்நாடு" ல் பதிவிடுகிறீர்கள் அவ்வாறு இருந்தால் நீங்கள் அவருடைய பெயர், விலாசம், தொடர்பு எண் மற்றும் விலை ஆகிய விவரங்களை எங்கள் "Inbox" கு அனுப்புங்கள். எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம்.

நமது குழு நிர்வாகிகள் சுமார் 12 நாய்குட்டிகளுக்கு மேல் பரிசாக கொடுத்திருக்கிறார்கள். அனால் அவர்கள் நாய்கள் வாங்குவதற்கு மிகப்பெரிய தொகையை கொடுத்திருக்கிறார்கள். அவ்வாறு இருந்தும் இலவசமாக கொடுப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.

நன்றி

Comments

 1. இலவசமாக ஒரு குட்டி கிடைத்தால் தேவலை.பிள்ளை போல் வளர்ப்பு உத்திரவாதம்
  9442635353

  ReplyDelete
 2. வணக்கம் நான் சென்னை பக்கத்தில் செங்குன்றத்தை சார்தவன்.
  எனக்கு நாட்டு நாய்கள் பிடிக்கும். அதிலும் கன்னி போன்ற வேட்டை நாய்கள் வளர்க்க மிக ஆசை நான் நிறைய முயற்சி செய்துவிட்டேன் இதுவரை கிடைக்கவில்லை. எங்கள் பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுவது வெளிநாட்டு நாய்கள். என்னை போன்று எனது சில நண்பர்களுக்கும் நாட்டு விலங்குகள் வளர்ப்பது பிடிக்கும் . இப்போதும் எங்கள் வீட்டில்
  சாதாரன நாட்டு நாய்கள் தான் வளர்க்கிறோம்
  இன்று வரை கன்னி போன்று நாட்டு வேட்டை நாய்களுக்காக எதிர்ப்பார்திருக்கிறேன்
  நன்றி
  மு.மகேந்திரன்
  8124399988

  ReplyDelete

Post a Comment