ஒரு நாய் இனத்தை பற்றிய உண்மையான தகவல்களை பெறுவது எப்படி?


ஒரு இனத்தை பற்றிய உண்மையான தகவல்கள் பெறவேண்டுமென்றால் அந்த நாயை பயன்பாட்டில் வைத்திருக்கும் நபர்களிடம் கேட்கவேண்டும்.
அதாவது தனது தொழிலுக்காக பாரம்பரியமாக பயன்பாட்டில் வைத்திருக்கும் அவர்களுக்கு தான் அந்த நாயை பற்றிய முழுமையான விவரங்கள் தெரியும்.
அதை தவிர்த்து இணையதளங்களில் காணப்படும் தகவல்கள், KCI போன்ற நாய் சங்கங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்கள், அந்த மண் சார்ந்தவர்கள் அல்லாத பிறர் எழுதும் புத்தகங்கள் முழுமையான அல்லது மிக சரியான தகவல்களை பதிவிடுவது கிடையாது.
அதுவே பிற்காலங்களில் ஊடகங்கள், பத்திரிகைகள் மூலமாக பிற்கால சந்ததிகளுக்கு பரப்பப்படுகிறது. ஊடகங்களும், பத்திரிகைகளும் ஒருவர் கூறும் தகவல்களின் உண்மை தன்மை ஆராயாமல் உறுதிப்படுத்தாத தகவல்களை பரப்பி வருகிறது.
எவருக்கும் அனைத்து அறிவும் ஒரு சேர கிடைக்க பெறுவது இல்லை. தாம் பதிவிட்ட தகவல்கள் தவறு என பின்வருங்காலங்களில் உணர்ந்தாலும் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் அவர்களிடம் இல்லை.
அனைவரும் நாய் வளர்த்தாலும் எவர் ஒருவர் இரத்தத்தில் நாய்கள் பற்றிய ஆர்வம் இயற்கையாக கலந்துள்ளதோ அவர்களுக்கே நுட்பமான அறிவு இருக்கும். அது இல்லாமல் ஒரு கவர்ச்சியில் நாய் வளர்ப்பவர்கள், பிரபலத்துக்காக அல்லது வெறுமனே வியாபாரத்துக்காக நாய் வருபவர்களிடம் இருந்து சரியான தகவலை பெற முடியாது.
குறிப்பாக - கன்னி நாயை பற்றி தெரிய வேண்டுமா - பாரம்பரியமாக முயல் வேட்டை ஆட இவ்வகை நாய்களை பயன்படுத்தி வந்த தென் தமிழ் நாட்டை சார்ந்த வேட்டை காரர்களிடம் கேளுங்கள் தெரியும்.
கோம்பை & ராஜபாளையம் நாய்களை பற்றி தெரிய வேண்டுமா - பாரம்பரியமாக ஆடு, மாடு கிடை வைத்திருப்பவர்கள், தன் விவசாய நிலங்களை காட்டு பன்றி போன்ற விலங்குகளிடன் இருந்து காக்க நாய் வளர்பவர்களிடம் கேளுங்கள் தெரியும்.
நன்றி

Comments