கன்னி நாய்களின் சராசரி உயரம் என்ன?

கன்னி நாய்களின் உயரத்தை அனுமான அடிப்படையில் பலரும் பல கருத்துக்களை கூறுவதுண்டு.
அனால் கன்னி நாயின் சராசரி உயரம் 25.4 இஞ்சஸ் (64.61 C.M)
இதை நாங்கள் கூறவில்லை "Central Goverment of India" ன் Survey Report" கூறுகிறது.
2014 ஆண்டு மத்திய அரசின் விலங்குகள் ஆராட்சி கழகமான "National Bureau of Animal Genetic Resources (NBAGR)" Dr. Raja (Scientist) மற்றும் P.K. Singh (Principal Scientist) தலைமையில் தமிழ்நாட்டில் கன்னி நாய்கள் அதிகமாக காணப்படும் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டங்களுக்கு சென்று அங்கு காணப்படும் கன்னி நாய்களை ஆராந்து இந்த ரிப்போர்ட்டை வெளியுட்டுள்ளனர்.
இந்த கணக்கீட்டில் ஒரு சில நாய்களே அதிகபட்ச உயரமாக 28.5" உயரத்தை தொட்டிருந்தது. அவ்வாறு காணப்பட்ட நாய்களின் உருவ அமைப்பும் மற்ற நாய்களிடம் இருந்து சிறிது மாறுபட்டே காணப்பட்டது.
ஆகவே நமது தமிழ் பாரம்பரிய கன்னி நாய்களை காக்கவேண்டும் என மனதார எண்ணும் நாம் எதார்த்தத்தை புரிந்துகொண்டு, உயரமான நாய் வளர்க்க வேண்டுமென 30" & 32" உள்ள கலப்பு நாய்களை வாங்கி வளர்க்காமல் சரியான உயரத்தில் உள்ள நாய்களை வாங்கி வளர்த்து நமது கன்னி நாய் இனத்தை காப்போம்.

Comments