கன்னி நாயில் சுத்த கருப்பு நிறம் வருமா என்றால் எங்கள் பதில் "வராது"
இந்த நாய் எங்கள் நாய் தான். கன்னி நாய்க்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய நாய் (நண்பர் பரிசாக கொடுத்தது). ஆனால் இது சுத்த கன்னி கிடையாது. இதனுடைய தாய் நாட்டு நாய், தகப்பன் சுத்த கன்னி.
மிக பிரசித்தி பெற்ற இந்த நாயை 1,50,000 ரூபாய்க்கு கேட்டும் திரு மதன் அக்னி அவர்கள் கொடுக்கவில்லை. இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறோம் என்றால் எங்கள் நோக்கம் வியாபாரம் கிடையாது. மாறாக அனைவரும் கன்னி நாய் பற்றிய தெளிவான அறிவை பெற்று பின்வரும் காலங்களில் பிறரிடம் கன்னி கலப்பு நாய்களை காசு கொடுத்து வாங்கி ஏமாறுவதை தவிற்பதற்காகவே இந்த பதிவு.
கடந்த 5 வருடங்களாக இந்த குழுவில் இருக்கும் நிர்வாகிகளும், மேலும் சில நண்பர்களும் தென் தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்டு கிராமங்களில் பாரம்பரியமாக கன்னி நாய்களை வளர்க்கும் வேட்டைகாரர்களை சந்தித்து அவர்களிடம் அனைத்து தகவல்களையும் சேகரித்து, போதுமான நாய்களை அவர்களிடம் பெற்று வளர்த்து அதன் மூலம் கிடைத்த அனுபவ அறிவையும் பெற்று அதை உங்களிடம் பகிர்ந்து வருகிறோம்.
இவ்வளவு ஆழமான அறிவை நாங்கள் பெற எங்களுக்கு உறுதுணையாக நின்று வழி நடத்தி வரும் எங்கள் குரு திரு. பழங்காநாத்தம் முருகன் அண்ணன் அவர்களுக்கு இந்த நேரத்தில் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் கன்னி நாய்க்கு என முகநூல் பக்கம் துவங்கி எங்கள் அனைவரும் இணைய காரணமாய் இருந்த தம்பி தீபன் அவர்களும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் எங்களுக்கு அன்று முதல் இன்று வரை அனைத்து உதவிகளையும் செய்துவரும், வேட்டை தடை செய்யப்பட்ட பின்பும் நமது வேட்டை நாயினங்களை அழியாமல் அடைகாத்து வைத்திருக்கும் எங்கள் உடன்பிறவா அண்ணன், தம்பிகளும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
பழங்கானநத்தம் முருகன் என்பவர் மதுரையைச் சேர்ந்தவரா வேரது எண் கிடைக்குமா ?
ReplyDelete