நாட்டு நாய்களை வளர்க்கவேண்டும் என நீங்கள் விரும்புவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்
அனால் அதற்கான தேர்வாக கன்னி நாய் வளர்க்க பிரியப்படுவதுதான் தவறு
கன்னி நாயை பொறுத்தமட்டில் காலம் காலமாக வேகமாக ஓடும் சிறு விலங்குகளை (e.g.முயல்) வேட்டையாடி வாழ்ந்துவரும் நாய் இனம். அதன் உடல் அமைப்பை பார்த்தாலே அது உங்களுக்கு புரிரும்.
நீங்கள் கேட்கலாம் இன்று தான் வேட்டையை தடை பண்ணிவிட்டார்களே அப்படி இருக்கும்போது இவ்வினத்தை எப்படி காப்பது?
உங்கள் கேள்வி சரிதான் ஆனால் இந்த தடை மனிதனுக்கு மட்டும் தான் நாய்க்கு அல்ல.
நீங்கள் கிராமங்களில் பார்த்தீர்களானால் தெரியும் இந்த நாய்களை கட்டி வைத்து வளர்க்கவேண்டிய அவசியமே இருக்காது. இவ்வகை நாய்களால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. இவை யாரையும் கடிக்காது. ஒருவரே பல நாய்களை வளர்க்க முடியும். அவைகளுக்குள்ளாகவே அதிகமாக சண்டையிட்டு கொள்ளாது.
இந்த நாய்களை யாரும் வேட்டைக்கு அழைத்து செல்ல வேண்டியது கிடையாது. அவைகளின் வாழ்விடத்தில் காணப்படும் சிறு விலங்குகளை தானாகவே வேட்டையாடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும்.
இவ்வகை நாய்களை நாம் நகர்ப்புறங்களில் வாங்கி வந்து வளர்க்கும் போது நாம் அதை அதன் இயல்பான குணங்களோடு வளர்ப்பதற்கான வாய்ப்புகள் அங்கு இருக்காது.
1.மேலும் கட்டிவைத்து வளர்க்கும்போது அதன் கால்கள் வளைய வாய்ப்பு இருக்கிறது.
2.வீட்டில் உரிமையாளர் இல்லாத நேரத்தில், தனிமையை உணரும்போது, இனப்பெருக்க காலங்களில் ஊளை விடும். இது அக்கம் பக்கத்தில் வாழ்பவர்களுக்கு தொந்தரவை தரக்கூடும்.
3.அறிமுகம் இல்லாத நபர்களிடமும் அன்பாக பழகும் குணமுடையது.
4.அதிகமாக குரைக்காது.
5.நாட்டு நாய் போலல்லாமல் ரோட்டில் வாகனங்களில் எளிதாக விபத்துக்குள்ளாகும்.
6.யார் அழைத்தாலும் போகும் குணமுடையதால் எளிதாக தொலைந்து விடும்
7.வழி தவறி சென்றுவிட்டால் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் குறைவு
8.மெலிவாக தோற்றமளிப்பதால் பிறர் நகைக்க கூடும்
9.கட்டி வைத்து வளர்ப்பதால் நாங்கள் பதிவு போடும் நாய்களை போல் அழகாக தோற்றமளிக்காது
10.நாங்கள் பதிவிடும் நாய்கள் காட்டில் ஓடுவதால் அது கட்டுமஸ்தாக அழகாக தோற்றமளிக்கும், மேலும் நாங்கள் சிறந்த நாய்களை பதிவிடுகிறோம், மேலும் புகைப்படம் எடுக்கும் விதம், புகைப்படத்தின் தரம் ஆகியவை வைத்தே அவை அழகாக தோற்றமளிக்கிறது.
11.ஆகவே நாங்கள் பதிவும் நாய்கள் போல் உங்கள் நாய்கள் வளராமல் இருப்பது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்
ஆகவே நீங்கள் கன்னி நாய் வளர்ப்பதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக கோம்பை, ராஜபாளையம், நாட்டு நாய் (Stray Dog) போன்ற நாய் இனங்களை வளர்க்கலாம்.
Comments
Post a Comment