ஓட்டத்தில் கன்னி நாய் சிறந்ததா அல்லது மற்ற ஹவுண்ட் இனங்கள் சிறந்ததா?


நம்மில் பலரிடம் இந்த சந்தேகம் இருக்கிறது

காட்டில் அனைத்து நாய்களுமே ஓடும் ஆனால் இங்கு விஷயம் அதுவல்ல எந்த நாய் துரத்தி செல்லும் விலங்கை முதலில் பிடிக்கிறது அது தான் இங்குள்ள வாதம்.

களத்தில் நாங்கள் கன்னி நாயுடன் கேரவன் ஹவுண்ட் , மொதல் ஹவுண்ட், கன்னி கலப்பு கேரவன் & மொதல், விப்பெட் போன்ற நாய்களின் விளையாட்டை பார்த்த அனுபவத்தில், கன்னி நாய்களே மிக விரைவில் இலக்கை பிடிக்கிறது. மேலும் நாள் முழுக்க களைப்படையாமல் செயல்படுகிறது.

அதற்கு காரணம் நமது நாய்களின் மிதமான உயரம், அதற்கான பயிற்சி, உணவு முறை, இன பெருக்கத்திற்காக நமது வேட்டைக்காரர்களின் தேர்வு முறை, நமது தட்ப வெப்ப நிலை, நமது மண்ணிற்கான குணம் இவை அனைத்துமே.

எந்த நாய்கள் விளையாட்டில் சிறந்து விளங்குகிறதோ அந்த நாய்களையே மட்டுமே நமது வேட்டைக்காரர்கள் இனப்பெருக்கத்துத்துக்கு தேர்வு செய்யும் மரபினை கையாண்டு வருகின்றனர்.

நமது நாய்கள் நம் மண்ணில் மட்டுமல்ல பிற மண்ணிலும் சிறப்பாக செயல்படும் என்பதை வெறும் ஊர்ஜிதமாக சொல்வதை தவிர்த்து அதை உறுதி படுத்தவே மதுரை பழங்காநத்தம் முருகன் அண்ணன் (Mikilan Mukil) அவர்கள் தனது கன்னி நாயை பெரும் பொருள் செலவில் (நாயை கொண்டு சென்றதற்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட 1,00,000 ரூபாய்) சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஹவுண்ட் இன நோய்களுக்கான ஓட்ட போட்டியில் கலந்து கொள்ள செய்தார்.

நமது நாய் மானை பிடித்து சுமார் ஒன்றை நிமிடத்துக்கு பிறகே பிற நாய்கள் இலக்கை அடைந்தது. இதை வைத்து பார்க்கும்போது நமது நாய்க்கான வேகத்துக்கு வேறு விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்.

நாயை சென்னை விமான நிலையத்தில் இருந்து அனுப்பி வைப்பதற்கான அனைத்து உதவிகளையும் புரிந்த திரு சாலமன் பொன்னுசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுளோம்.

இது சாதாரண முயற்சி கிடையாது அதற்காக முருகன் அண்ணன் எவ்வளவு பாடு பட்டார் என்பதை கடைசி வரை கூட இருந்து பார்த்தேன் என்பதால் எனக்கு தெரியும். சொல்ல போனால் அந்த நிகழ்வுகளை ஒரு கட்டுரையாகவே எழுதலாம்.

இவ்வளவு பெருமை வாய்த்த நமது நாய்களின் சிறப்பு தெரியாமல் சிலர் வியாபாரத்திற்காக நமது நாய்களை பிற இனங்களுடன் கலப்பு செய்து நமது நாய்களின் தனித்துவத்தை அழித்து வருகின்றனர்.

சில வேட்டைக்காரர்கள் வெளி மாநில, வெளிநாட்டு ஹவுண்ட் நாய்களை வாங்கி வந்து வளர்கின்றனர். அவர்கள் வளர்ப்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் அனால் இதுவே வரும் காலங்களில் அவர்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ நமது நாய்கள் அவ்வின நாய்களுடன் கலந்து தனது தனித்துவத்தை இழக்க காரணமாக அமைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆகவே நமது நாட்டு நாய் இனங்களை தனித்துவம் மாறாமல் பாதுகாக்க நினைக்கும் நமது உறவுகள் பிற மாநில, பிற நாட்டு நாய் இனங்களை தவிர்ப்பதே சிறந்தது.

இது எங்களுடைய ஒரு பணிவான வேண்டுகோள்

மேலும் நாம் அனைவரும் ஒன்றிணைத்து செயல்படுவோமானால் உலகின் வேகமாக ஓடும் நாய்கள் பட்டியலில் கன்னி நாய் முதல் இடத்தில் இருக்கும் என்பது உறுதி.

நன்றி

Comments